குழந்தை பெற்ற பின் வரும் வலியை சரி செய்யும் உளுத்தம் கீர்! மிஸ் பண்ணாதிங்க!

பெண்களுக்கு பொதுவாக முதுகு வலி வருவது இயல்பு , அதிலும் குழந்தைகள் பெற்ற பிறகு வலி அதிகமாக வருகிறது, குழந்தைகள் பெற்ற பின் வரும் வழியை சரி செய்யும் உளுத்தம் கீர் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பால் – 250 மி.லி,
உளுத்தம் பருப்பு – 100 கிராம்,
பச்சரிசி (அ) பாஸ்மதி அரிசி – 100 கிராம்,
தேங்காய்த் துருவல் – ஒரு கப்,
வெல்லம் – 100 கிராம் துருவியது ,
ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு ,
கேசரிக் கலர் – சிறிதளவு ,
நெய் – தேவையான அளவு
சுக்குப்பொடி – 1/2 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு- தேவையான அளவு.

கோதுமையில் சுவையான சத்தான கீர் செய்யலாமா? இதோ!

செய்முறை :

முதலில் உளுத்தம் பருப்பை நெய்யில் சிவக்க வறுத்து, அரிசியுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். முந்திரிப் பருப்பையும் நெய்யில் வறுத்து கொள்ளவும். தேங்காய்த் துருவலை நன்கு அரைத்துப் பாலெடுக்கவும். சக்கையை பிழிந்து தனியே வைக்கவும்.

ஊறிய உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியுடன் தேங்காய் சக்கையைச் சேர்த்து, தண்ணீர் விட்டு நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதைப் போல், இரண்டு மடங்கு தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க வைக்கவும்.

அதில் அரைத்த விழுதை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டிவிழாமல் கிளறவும்.அதனுடன் வெல்லத்தையும் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.

பத்து நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கி, அதனுடன் ஏலக்காய்ப் பொடி, முந்திரிப் பருப்பு, கேசரிக்கலர், சுக்குப்பொடி சேர்த்துக் கலக்கவும். கடைசியாக தேங்காய்ப் பாலையும் சேர்த்துக் கலக்கவும்.

இந்த உளுத்தம் கீர் உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.