உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் என எச்சரித்து வந்தனர்.
ஆனால் வரம்பு மீறிய ரஷ்யா கடந்த 2 மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது குண்டு மழை பெய்தது. இதனால் அந்நாட்டில் பல அப்பாவி மக்கள் ரஷ்ய படைகளினால் கொன்று குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கார்கிவ் நகரில் உக்ரைன் படைகள் ஹொவிட்சர் ஆயுதங்களை கொண்டு ரஷ்யப் படைகள் மீது கோரத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக உக்ரைனில் ரஷ்யப் படைகளின் தாக்குதலால் கட்டடங்கள், குடியிருப்புகள், பாலங்கள், சாலைகள் பெரும் சேதம் அடைந்தனர்.
இதனிடையே இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹொவிட்சர் ஆயுதங்களை கொண்டு ரஷ்யப் படைகள் மீது உக்ரைன் வீரர்கள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.