Connect with us

உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் உக்ரைன் போர்..!! அனல்பறக்கும் கருத்துக்கள்!!

uttar pradesh

News

உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் உக்ரைன் போர்..!! அனல்பறக்கும் கருத்துக்கள்!!

உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் உக்ரைன் போர்..!! அனல்பறக்கும் கருத்துக்கள்!!

தற்போது உலகம் பேசப்படும் ஒரு செய்தியாக காணப்படுகிறது உக்ரைன் போர் விவகாரம். இவை இந்தியாவில் உத்தரபிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்திலும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்தப்படி உத்தரபிரதேசமாநிலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமாமாலினி உக்ரைன் விவகாரத்தில் உலகமே எதிர்பார்க்கும் மிக முக்கிய தலைவராக மோடி உள்ளார் என்று கூறினார்.

இதற்கு முன்னதாக காங்கிரஸ் தரப்பிலிருந்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரியங்கா காந்தி உக்ரைன் போர் பற்றி பேசும் மோடி உத்தரபிரதேச விவசாயிகளின் நிலைமை பற்றி பேசவில்லை என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போர் விவகாரம் பற்றி உலகத் தலைவர்களுடன் பேசும் மோடி விவசாயிகளின் பிரச்சினை தெரியவில்லை என்றும் பிரியங்க காந்தி கூறினார். மோடியை அனைத்தும் அறிந்த சர்வ ஞானி என்றும் பிரியங்கா காந்தி கிண்டல் செய்தார்.

உத்தரபிரதேசமாநிலத்தில் கைவிடப்பட்டுள்ள மாடுகள் அங்குள்ள விவசாய நிலங்களை நாசம் செய்வதால் அங்குள்ள விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகிறது பற்றி மோடி அக்கறை இல்லை என்று பிரியங்கா காந்தி கூறினார்.

அதேபோல் பிரதமர் மோடி உத்தரபிரதேசமாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது உலகமே எதிர்பார்க்கும் நிலையில் இந்தியா நலன்களுக்காகவும் இந்தியா வலிமையாக இருக்க வேண்டிய தருணம் என்று மோடி கூறினார். இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் இந்தியாவின் வலிமையை குறைக்கும் வகையில் பயங்கரவாதிகளுக்கு துணை போவதாக குற்றம்சாட்டினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top