ஆபத்து.. ஆபத்து… உக்ரைனை எச்சரித்த பிரான்ஸ்… கொடூர திட்டம் போடும் ரஷ்யா!
உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு உக்ரைனை எச்சரித்துள்ளது.
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர் உச்சத்தில் இருக்கின்ற இந்தத் தருணத்தில், ரஷ்ய நாட்டு ராணுவம் உக்ரைன் நாட்டிற்குள் புகுந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியும், குண்டுமழை பொழிந்தும் வருகின்றது. உக்ரைன் தலைநகரை கைப்பற்றியுள்ள நிலையில், தாக்குதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட வேண்டுமென ரஷ்யாவிற்கு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா., நேட்டா என எந்த அமைப்பும் உக்ரைனுக்கு உதவ முன்வாராத நிலையில், பலம் பொருந்திய ரஷ்யாவை உக்ரைன் ராணுவம் மற்றும் மக்கள் படை எதிர்த்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெலாரஸ் நாட்டில் இருந்து அணு ஆயுத தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். மனிதாபிமானம் அற்ற செயலில் ரஷ்யா ஈடுபடுவதால் அதற்கு துணை போக வேண்டாம் என்றும் பெலாரஸ் நாட்டிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் அணு ஆயுத தாக்குதல் தொடர்பாக தன்னிடம் பிரான்ஸ் அதிபர் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என பெலாரஸ் அதிபர் உறுதிபடுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு உக்ரைனை எச்சரித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
