உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி;; சமையல் எண்ணெய் விநியோகத்திற்கு கட்டுப்பாடு !!

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் என எச்சரித்து வந்தனர்.

ஆனால் வரம்பு மீறிய ரஷ்யா கடந்த இரண்டு மாதங்களாக உக்ரைன் மீது குண்டு மழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டில் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக கொன்று குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலியாக இங்கிலாந்தில் சமையல் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து மக்கள் சமையல் எண்ணெய் வாங்குவதற்கு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் பல்பொருள் அங்காடிகளுக்கு வரக்கூடிட சூரியகாந்தி எண்ணெய் பெரும்பாலும் உக்ரைனில் இருந்தே வருகிறது. தற்போது அந்நாட்டில் போர் நடைபெற்று வருவதால் சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றிற்கு தட்டுப்பாடு நிலவியுள்ளது.

இதனால் டெஸ்கோ பல்பொருள் அங்காடியில் ஒரு வாடிக்கையாளர்களுக்கு 2 எண்ணெய் டின்கள் மட்டுமே வழங்கப்படுகின்றனர். அதே போல் ஐஸ்லாந்து பல்பொருள் அங்காடியில் ஒரு வாடிக்கையாளர்களுக்கு 1 எண்ணெய் டின்கள் மட்டுமே வழங்குகிறது. மேலும், அனைவருக்கும் எண்ணெய் கிடைக்கும் வகையில் தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment