உக்ரைன் – ரஷ்யா போர்: இன்று கூடுகிறது 4- ஆம் கட்ட பேச்சுவார்ர்த்தை !!
உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே தொடர்ந்து 18 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இதற்கு பல உலக நாடுகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களான கீவ், கார் கீவ் போன்ற முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்யா தொடர் குண்டுமழை பெய்து வருகிறது. இதனால் பல லட்சம் உக்ரைன் நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த போரை முடிவிக்கு கொண்டுவர பல உலக நாடுகள் வலியுறுத்தியதால் ரஷ்யா- உக்ரைன் இடையேனா பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனிடையே ரஷ்யா- உக்ரைன் இடையே 4- கட்ட பேச்சுவார்த்தை இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய பேச்சுவார்த்தையிலாவது போர் முடிவுக்கு வருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
