#BREAKING முடிவுக்கு வருகிறது உக்ரைன் – ரஷ்யா போர்… அமைதி ஒப்பந்தம் தயார்!
உக்ரைன் – ரஷ்யா சமாதானப் பேச்சுவார்த்தையில் உத்தேச அமைதி ஒப்பந்தம் தயாராகிவிட்டதாகவும், இரு நாட்டினிடையே எந்நேரமும் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி போர் தொடுத்தது. இதனையடுத்து நடந்த கடுமையான போரில் உக்ரைனின் தலைநகரான கீவ், கார்கீவில், ஸாப்போரீஷியா, மேரியோபோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் ரஷ்ய குண்டு வீச்சால் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த போரால் இதுவரை உக்ரனை விட்டு 28 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது.
ஒருபுறம் உக்ரைன் – ரஷ்யா போர் தீவிரமடைந்து வரும் அதே சமயத்தில், மறுபுறம் அமைதி பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்டங்களாக அமைதி பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று காணொலி முறையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உக்ரைன் அதிபரின் உதவியாளர், ரஷ்யா தனது பிடியிலிருந்து இறங்கி வந்துள்ளதாக தெரிவித்தார்.
ஆரம்பத்தில் இருந்தே உக்ரைன் வீரர்கள் சரணடைய வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அந்த முடிவில் மாற்றம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் உக்ரைன் – ரஷ்யா சமாதானப் பேச்சுவார்த்தையில் உத்தேச அமைதி ஒப்பந்தம் தயாராகிவிட்டதாகவும், இரு நாட்டினிடையே எந்நேரமும் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
