ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்த உக்ரைன்; இதுவரை 5 போர் விமானங்களை வீழ்த்தியதாக அறிவிப்பு!
உக்ரைனில் என்ற ரஷ்ய ராணுவம் போர் தொடுத்துக் கொண்டு வருகிறது. இதனால் உக்ரைனில் வாழும் மக்கள் மிகவும் பதற்றமான நிலையில் காணப்படுகின்றனர். அதுவும் குறிப்பாக ரஷ்ய ராணுவத்தினர் உக்ரைனில் ராணுவ தளங்கள், துறைமுகங்கள்,விமான நிலையங்கள் போன்ற கைப்பற்றும் முயற்சியில் அதிக தீவிரமாக போர் புரிந்து வருகின்றனர்.
அதோடு மட்டுமில்லாமல் இன்று காலை ரஷ்ய அதிபர் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். ரஷ்யா போர் விவகாரத்தில் எந்த ஒரு நாடும் தலையீட்டால் தக்க பதிலடி வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் உக்ரைனும் தனது பங்கிற்கு ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து போரிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் ஒரு கட்டமாக 5 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தகவல் கசிந்துள்ளது.
அதன்படி ரஷ்யாவின் 5 போர் விமானங்களை நாங்கள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் லுகான்ஸ்க்கில் ரஷ்யாவின் ஒரு ஹெலிகாப்டரை வேண்டியுள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் ரஷ்ய ராணுவத்தினரை மெல்ல மெல்ல உக்ரைன் இராணுவத்தினர் எதிர்த்துப் போரிட்டு வருகின்றனர்.
