Connect with us

ரஷ்ய அதிபர் புடின்னை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்க வாய்ப்பு!!

ukraine russia

செய்திகள்

ரஷ்ய அதிபர் புடின்னை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்க வாய்ப்பு!!

பிப்ரவரி 24ஆம் தேதி அன்று ரஷ்யா உக்ரைன் மீது போர் புரிய தொடங்கியது. அன்று முதல் உக்கிரேனில் உள்ள பல பகுதிகளை ரஷ்யா தன்வசமாக கைப்பற்றிக் கொண்டு வருகிறது. மேலும் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இந்த நிலையில் தற்போது வரை உக்ரைனில் பதட்டமான சூழ்நிலை நிலவிக் கொண்டு வருகிறது. மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கு உலகில் உள்ள பல நாட்டு அதிபர்களும் ஆலோசனையை வழங்கிக் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ரஷ்ய அதிபர் புடின்ணை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ஜி-20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இதில் கலந்துகொள்ள உக்கிரன் அதிபருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு இந்தோனேசியாவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொள்கிறார் என்று கிரெம்ளின் கூறியுள்ளார்.

ஜி-20  மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் பெறப்பட்டுள்ளது, மேலும் மாநாட்டில் கலந்து கொள்ள ரஷியா அரசு விருப்பம் தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top