உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த மாதம் 24- ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் மேலும் உக்கிரமடைந்தால் பெரும் பொருளாதர சேதம் நடைபெறும் என பல உலக நாடுகள் எச்சரித்து வருகின்றனர்.
இருப்பினும உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே ஆன போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து கொண்டுதான் வருகிறது. இதனை தடுக்க 3- கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பயனும் இல்லாமல் போனது.
இதனிடையே உக்ரைனில் வாழும் பல ஆயிரம் மக்கள் அண்டைநாடுகளுக்கு தஞ்சம் அடைந்தும், பல பேர் சுரங்கப்பாதைகள் மற்றும் பதுங்கு குழிகளிலும் பதுங்கி இருப்பது காண்போரை கலங்க வைக்கிறது.
இதனை தொடர்ந்து உக்ரைனில் வாழும் இந்தியர்கள் மற்றும் மாணவர்களை தாயகம் திரும்ப ஒன்றிய அரசு விமான போக்குவரத்து அமலுக்கு கொண்டு வந்து பல அயிரம் மக்களை தாயகம் திரும்ப வைத்தது.
இந்நிலையில் தற்போது இந்தியர்கள் யாராவது உக்ரைனில் இருந்தால் அவர்கள் தங்கள் சொந்த செலவிலேயே தாயகம் திரும்ப வேண்டும் என்றும் இனிமேல் மீட்பு விமான சேவை வழங்கப்படாது என இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளார்.