உக்ரைன் நாடு தற்போது பரிதவிக்கும் நிலையில் காணப்படுகிறது. ஏனென்றால் இன்று எதிர்பார்க்காத விதமாக காலை ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது ராணுவ படையை போர்தொடுக்க உத்தரவிட்டு இருந்தது.
இதனால் ரஷ்ய ராணுவத்தினர் வரிசையாக உக்ரேனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிக்கு தரைவழி மூலமாக நுழைந்துள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக தகவல் கிடைத்தது.
இதனால் அங்குள்ள மக்கள் சுரங்கப் பாதைகளில் பதுங்கி உள்ளனர். மேலும் பதுங்கு குழிகளில் ஒதுங்குமாறு மக்களுக்கு பல்வேறு நாடுகள் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டிலிருந்து தப்பி வரும் மக்கள் வேறு நாடுகளுக்கு செல்ல பல நாடுகள் தயங்கி வந்தன.
ஆனால் தற்போது உக்ரைன் மக்களுக்கு தஞ்சம் தர தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளிவரும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என்று மால்டோவா அதிபர் அறிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் என்று உக்ரேனின் அண்டை நாடான மால்டோவாவின் அதிபர் அறிவித்துள்ளார்