தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவிப்பது ஏன்?!

de21f0f3b56cd8243d958e54211af58a-2

துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற உக்கிர தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவிப்பதை பார்த்திருப்போம். இந்துமத வழிபாட்டில் கனிமாலை சாத்தும் வழக்கம் உள்ளது. கனிமாலை என்றால் அது எலுமிச்சம் பழ மாலையையே குறிக்கும்.
உக்ரமான தெய்வங்களை குளிர்விக்க எலுமிச்சை மாலை அணிவிப்பது வழக்கம். எலுமிச்சை மாலையோடு தயிர்சாதம், பானகம் நிவேதனம் செய்ய வேண்டும் என்பதும் நியதி. கூழ் வார்த்தும் பக்தர்களுக்கு கொடுக்கலாம். நீண்ட நாள் தடைபட்ட செயல்கள் கனிமாலை சாத்தி வழிபாடு செய்தால் கைகூடும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் எலுமிச்சம் பழங்களை மாலையாகத் தொடுத்து அம்மனுக்கு அணிவித்து வேண்டுதல் செய்தால் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

7e557964ea39634651682b7ce54bc448-2

எலுமிச்சையை மாலையாய் கோர்க்கும்போது, உடல், மனத்தூய்மையோடு ஒரே அளவிலான, முழுதாய் பழுத்த நல்ல நிறமுள்ள பழங்களை மாலையாக கோர்க்க தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுத்த எலுமிச்சையை நன்றாய் கழுவி எந்த தெய்வங்களுக்கு அணிவிக்கப்போகிறோமோ அந்த தெய்வத்தின் நாமத்தை சொல்லியபடி எலுமிச்சம்பழங்களின் எண்ணிக்கை 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் கோர்க்க வேண்டும். பழங்கள் காயாகவோ அல்லது மிகவும் பழுத்த நிலையிலோ, ஆங்காங்கு புள்ளிகளுடனும், அழுகியும் இருந்தாலும் அவற்றை தவிர்ப்பது நல்லது. அம்மனுக்கு கோர்க்கும்போது வேப்பிலையை இடையில் வைத்து கோர்ப்பது தப்பில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.