இங்கிலாந்து நாட்டில் இறந்த நண்பரின் உடலை இரண்டாக வெட்டி ப்ரீசரில் வைத்துவிட்டு அவருடைய வங்கி கணக்கை இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி 73 வயது நபர் ஒருவர் மரணம் அடைந்தார். அவரது மரணத்தை அறிந்த அவரது நெருங்கிய நண்பர் உடனடியாக அவரது பிணத்தை இரண்டாக வெட்டி ஃப்ரீஷரில் வைத்து விட்டார். இதனை அடுத்து அவர் இறந்ததாக யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தனது நண்பரின் வங்கி கணக்கு, டெபிட் கார்டு கிரெடிட் கார்டு ஆகியவற்றை அவர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தார் என்றும் அவருக்கு வந்த வருமானம் முழுவதையும் அவர் மோசடி செய்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகள் அவருடைய மொத்த வரவு செலவு கணக்கையும் அவரே மேற்கொண்டு வந்தார் என்றும் அதன் பிறகு தான் உறவினர்களின் சந்தேகம் காரணமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை செய்தபோது இந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பரின் மரணம் எதிர்பாராதது என்றும் அவரை தான் கொலை செய்யவில்லை என்றும் ஆனால் அந்த மரணத்தின் மூலம் தான் பயன் பெறலாம் என்று தான் அவருடைய பிணத்தை இரண்டாக வெட்டி ப்ரீசரில் வைத்துவிட்டு அவருடைய வங்கி கணக்கை தான் பயன்படுத்தியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இறந்த நபரின் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இரண்டு ஆண்டுகளாக பிரீசரில் வைக்கப்பட்ட உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
இறந்த நபர் கொலை செய்யப்படவில்லை என்றால் அவருடைய வங்கி கணக்கை பயன்படுத்தியதற்காக மட்டும் சிறிய தண்டனை அவருடைய நண்பருக்கு கிடைக்கலாம் என்றும் ஆனால் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.