அமைச்சராகிறார் உதயநிதி.. சீனியர் திமுக தலைவர்கள் அதிருப்தியா?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருப்பதாகவும் இதன் காரணமாக சீனியர் திமுக தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திமுக ஆட்சியின் தொடக்கத்தின் போது உதயநிதி அமைச்சர் ஆவார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு இந்த ஆண்டு மே 7 ஆம் தேதி திமுக ஆட்சியின் ஒரு ஆண்டு நிறைவின் போது உதயநிதி அமைச்சர் ஆவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த இரண்டிலும் அமைச்சர் ஆகாத நிலையில் தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி பொறுப்பு ஏற்க இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உதயநிதிக்கு அறை தயாராகி வருவதாகவும் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இளம் வயதிலேயே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதால் திமுக சீனியர் தலைவர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த அதிருப்தியை அவர்கள் வெளியில் காட்டி கொள்ள முடியாததால் உள்ளுக்குள்ளேயே புழுங்கி வருவதாகவும் திமுக தரப்பில் இருந்து செய்திகள் கசிந்து இருந்தது.

இந்த நிலையில் அடுத்த பொதுத் தேர்தலின்போது உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றும் திமுக வட்டாரங்கள் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.