உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு: இபிஎஸ்-க்கு அழைப்பு..!!

தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றி ஓராண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், கட்சி விரிவாக்கம் குறித்து தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக அமைச்சரவையில் புதியதாக மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உட்கட்சித் தேர்தல்கள் முடிவு பெற்ற சூழலில் மீண்டும் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என ஆலோசனை நடத்தி வந்தனர்.

ஊட்டியில் காட்டாற்று வெள்ளம்: 3 பெண்கள் உடல் மீட்பு!!

அதே சமயம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்த கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு பரிந்துறை செய்தார். அதன் படி, நாளைய தினத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதிவியேற்க உள்ளார்.

தற்போது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அவர் பங்கேற்க உள்ளதாக தகவலும் வெளியாகி உள்ளது. அதே போல் ஓபிஎஸ்-க்கும் அழைப்பு விடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடியை கொல்லுங்கள்! காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் கைது!!

இதனை தொடர்ந்து தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் முத்தரசன் உள்ளிட்டோருக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.