உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் விக்ரம். இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகத்தில் வெளியிட்டது.
இந்த கூட்டணியில் வெளிவந்த விக்ரம் படமானது வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்ந்துள்ளது.
அந்த வகையில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 54-வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். இதனை சமீபத்தில் நடந்த பேட்டியில் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கயுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை உறுதி படுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
15 வருட @RedGiantMovies_-ன் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். @RKFI தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான
அறிவிப்பை வெளியிட்ட @ikamalhaasan சாருக்கு நன்றி. pic.twitter.com/SA0rc7uItW— Udhay (@Udhaystalin) July 26, 2022