ரெட் ஜெயன்ட்டில் இருந்து விலகுகிறார் – உதயநிதி !

ரெட் ஜெயன்ட்டில் நிறுவனத்தின் வெளியீடுகளில் இனி உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம் பெறாது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் , திருவல்லிக்கேணியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் சட்ட மன்ற உறுப்பினரானார்.

சமீபத்தில் இளைஞர் நல மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலின் தாம் அரசியலில் முழு கவனத்தை செலுத்த இருப்பதாகவும் இனி சினிமாவில் நடிக்க போவதில்லை என்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் படமே கடைசி படம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சராக பதவி ஏற்றதால் இனி ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் வெளியிடும் படங்களில் உதயநிதி ஸ்டாலின் பெருமையுடன் வழங்கும் என்பதற்காக அவரது மனைவி கிருத்திகா உதயநிதி வழங்கும் என்ற புதிய பெயர் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

என்னை ஆங்கிலத்தில் பேச சொல்ல நீ யார்? நடிகர் சித்தார்த்துக்கு சிஐஎஸ்எப் வீரரின் பதிலடி

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் உதயநிதி ஸ்டாலின் அதிக படங்களை வெளிட்டு வருவதாக அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் விமர்சனங்களை தவிர்க்கவே இந்த பெயர் மற்ற முடிவு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.