முக அழகிரியை திடீரென சந்தித்த உதயநிதி ஸ்டாலின்.. என்ன சொன்னார் தெரியுமா?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரர் முக அழகிரி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்பது பல ஆண்டுகளாக இருந்து வரும் விஷயமாக உள்ளது.

இந்த நிலையில் மதுரை சென்ற உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா முக அழகிரியை சந்தித்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பாவை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றார். இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது மதுரை வந்தவுடன் அழகிரி பெரியப்பாவை சந்தித்து ஆசி பெற்றேன், பெரியப்பா என்னை வாழ்த்தி உள்ளார் அவருக்கு நான் நன்றி தெரிவித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து முக அழகிரி கூறியபோது, ‘எனது தம்பி மகன் என்ற முறையில் பெரியப்பாவிடமும் பெரியம்மாவிடமும் அவர் ஆசி பெற்றுள்ளார். ஒரு அமைச்சராக உதயநிதி எங்களது வீட்டிற்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

உதயநிதி சிறுவயதில் இருக்கும்போது எங்கள் வீட்டிற்கு வந்து என் மகன்களுடன் விளையாடியவர் தான். அவர் இன்று அமைச்சர் உள்ளார் என்றால் அதைவிட சந்தோசம் எனக்கு வேறு எதுவும் இல்லை. எனது தம்பி முதல்வர் ஆகியுள்ள நிலையில் தம்பி மகன் அமைச்சர் ஆகி உள்ளது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.