அண்ணாமலை இடம் 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் அண்ணாமலை மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்வேன் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் சொத்து பட்டியல் குறித்த விபரங்களை வெளியிட்டார். இந்த விபரங்கள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆனால் திமுக சார்ந்த ஊடகங்கள் இதை செய்தியாக கூட வெளியிடாமல் இருட்டடிப்பு செய்ததாகவும் டிஜிட்டல் ஊடகங்கள் மட்டுமே இதனை வைரல் ஆக்கியது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே பதில் கூறிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி 500 கோடி ரூபாய் கேட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் ஆருத்ரா ஊழலில் தனக்கு சம்பந்தம் இருப்பதாக கூறிய ஆர்எஸ் பாரதி மீது 500 கோடியே ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர் இருப்பதாக அண்ணாமலை பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் திமுக வழக்கறிஞர் வில்சன், உதயநிதி ஸ்டாலின் சார்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தனது கட்சிக்காரர் உதயநிதி அமைச்சராக இருந்து வருகிறார் என்றும் அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2000 கோடி ரூபாய் என்று அண்ணாமலை கூறி இருக்கிறார் என்றும் அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரத்தில் அவர் தனது கருத்தை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி இன்று மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்த போது அண்ணாமலை மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்வேன் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே திமுக சார்பில் ஆர்எஸ் பாரதி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ள நிலையில் உதயநிதி மற்றும் கனிமொழியும் வழக்க தொடர இருப்பதால் இதற்கு அண்ணாமலை என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.