News
விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உதயநிதி!!!
தனது நடிப்பாலும் தனது திறமையாலும் இன்றுவரை மக்களிடையே கேப்டன் என்று அழைக்கப்படுகிறார் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு இருந்து காணப்பட்டார் அதன் பின்னர் அரசியலில் முழுவதுமாக இறங்கினார். இதனால் அவர் தேமுதிக என்ற கட்சியை நிறுவினார் மேலும் அக்கட்சியின் தலைவராகவும் தற்போது உள்ளார். இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்துக்கு இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் வரிசையில் தற்போது நடிகரும் திமுக வின் எம்எல்ஏவாக உள்ள உதயநிதி ஸ்டாலின் கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார், தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகம்-அரசியலில் என தனி முத்திரை பதித்தவர், கலைஞரின் அன்புக்குரியவர், திமுக தலைவரின் நண்பர் என்றும் அவர் கூறியுள்ளார்.
மிக முக்கிய ஆளுமை அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். விஜயகாந்த் முழு ஆரோக்கியத்துடன் மக்கள் பணியாற்ற எனது விருப்பத் தையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
