எனக்கும் ஆர்ஆர்ஆர் படத்துக்கும் ஒரு கனெக்சன் இருக்கு….! ஓபனாக போட்டு உடைத்த உதயநிதி….!

ஆர்ஆர்ஆர் திரைப்படம்

பாகுபலி போன்ற ஒரு பிரம்மாண்ட படத்தை தொடர்ந்து அதே பிரம்மாண்டம் சற்றும் குறையாமல் ஆர்ஆர்ஆர் என்ற ஒரு படத்தை இயக்குனர் ராஜமொளலி இயக்கியுள்ளார். உண்மையை கூற வேண்டுமானால் பாகுபலி படத்தைவிட இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஆர்ஆர்ஆர்

 

தற்போது சோசியல் மீடியாவில் எங்கு திரும்பினாலும் நாட்டு நாட்டு பாடல் தான் டிரெண்டிங்கில் உள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜனவரியில் வெளியீடு

சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தி விட்டது. அதன்படி வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

உதயநிதி

இதனை தொடர்ந்து படத்தின் புரொமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னையில் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. இதில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர்களுடன் இணைந்து சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயனும், உதயநிதியும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஆர்ஆர்ஆர் படத்துக்கும் எனக்கும் ஒரு கனெக்‌ஷன் உள்ளது” என கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். அதாவது ஆர்ஆர்ஆர் படத்தின் விநியோக உரிமையை தமிழகத்தில் 3 மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம். அதை தான் உதயநிதி அப்படி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment