Connect with us

மாதவனின் ராக்கெட்ரி படம் குறித்து கருத்து வெளியிட்ட உதயநிதி! குவியும் பிரபலங்களின் பாராட்டு.

x720 1

பொழுதுபோக்கு

மாதவனின் ராக்கெட்ரி படம் குறித்து கருத்து வெளியிட்ட உதயநிதி! குவியும் பிரபலங்களின் பாராட்டு.

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அழைக்கப்படும் மாதவன் தயாரித்து, இயக்கி நடித்துள்ள தி ராக்கெட்ரி – நம்பி எஃபெக்ட் திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படம் இந்தி, தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. இந்த கதைக்காக விஞ்ஞானி நம்பி நாராயணன் அவருக்கு மாதவன் 80 வரை இலட்சம் கொடுத்துள்ளாராம்.

WhatsApp Image 2020 10 09 at 2.22.44 PM

உண்மை சம்பவமான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் தான் ராக்கெட்ரி.

சில தினங்களின் முன் நடிகர் ரஜினிகாந்த், ராக்கெட்ரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்றும் குறிப்பாக இளைஞர்கள் இந்தப் படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இயக்குநராக தனது முதல் படத்திலேயே நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் பல துன்பங்களுக்கு உள்ளாகி,படமாக்கி தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையான தானும் ஒருவர் என நிரூபித்திருக்கிறார் மாதவன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் தமிழகத்தில் படத்தை வெளியிட்டது, அதை தொடர்ந்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், ராக்கெட்ரி திரைப்படம் நல்ல விமர்சனங்களுடன் நல்ல வசூலையும் பெற்றுவருகிறது. மாதவன் மற்றும் ராக்கெட்ரி குழுவுக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

அஜித் 61 டைட்டில் – ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? சென்டிமென்ட் டச் கொடுக்கும் போனி கபுர்!

மாதவனின் ராக்கெட்ரி படத்திற்கு முன்னணி நட்ஷத்திரங்கள் வாழ்த்துகூறிவருவது படத்திற்கு மேலும் ஒரு பலமாக அமைகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top