அதிக கட்டணம் வசூல்… பெங்களூரில் உபர் ஆட்டோக்களுக்கு தடை!!

பெங்களூரில் கடந்த சில நாட்களாக ஆட்டோ கட்டணங்களுக்கு அதிகம் வசூலிப்பதாக தகவல் எழுந்தது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்

இந்நிலையில் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களுக்கு அம்மாநில போக்குவரத்து ஆணையர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியது. குறிப்பாக இத்தகைய அதிக வசூல் கட்டணத்திற்கு 3 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தது.

இதற்கு தகுந்த பதிலளிக்கவில்லையெனில் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களுக்கு சட்டப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் தற்போது பல மடங்கு கட்டணம் வசூலித்ததால் அரசு நடவடிக்கையாக, 3 நாட்கள் சேவையை நிறுத்த அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment