இரண்டாவது டோஸ்க்கு 2 தடுப்பூசியும் கையில் இருக்கிறது! சென்னையில் 2 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு!!

கொரோனாவை தடுக்கும் பேராயுதம் தடுப்பூசி என்று நம் இந்தியாவில் அதிக அளவு கூறப்பட்டு வருகிறது. அதன்படி நம் இந்தியாவில் 110 கோடிக்கு அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி

இந்த சாதனை உலகத்தையே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் நம் தமிழகத்தில் வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நம் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கொரோனா தடுப்பூசி பற்றிய சில முக்கிய தகவல்களை கூறினார். அதன்படி இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு தடுப்பூசி  கையிருப்பு உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் கோவாக்சின் கோவிசில்டு தடுப்பூசி தமிழகத்தில் கையிருப்பில் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

72 லட்சம் பேர் இன்னும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த கால அவகாசம் முடிந்து காத்திருக்கின்றனர் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் இன்று இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் 60 நாட்களாகக் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment