சென்னையில் மீண்டும் வெள்ளம்: இரண்டு சுரங்கப்பாதைகள் மூடல்!

கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதையடுத்து சென்னையில் உள்ள பல சுரங்கப் பாதைகளில் தண்ணீரில் மூழ்கியது என்பதும் இதனை அடுத்து மாநகராட்சி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக மீண்டும் சுரங்க பாதைகளில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் மீண்டும் சுரங்க பாதைகளை தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக ஒருசில சுரங்க பாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

குறிப்பாக சென்னையில் உள்ள சென்னை தி நகரில் சுரங்க பாதையும், ரங்கராஜபுரம் சுரங்கப் பாதையிலும் தண்ணீர் தேங்கி உள்ளதன் காரணமாக இரண்டு சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளதாகவும், தற்போதைக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தண்ணீரை வெளியேற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் மிக விரைவில் இந்த இரண்டு சுரங்கப்பாதைகள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment