பந்துவீச்சில் பட்டையை கிளப்பும் இரண்டு அணிகள் பலப்பரீட்சை..! டாஸ் வென்ற இளம் வீரர் பௌலிங் தேர்வு;

நம் இந்தியாவில் விறுவிறுப்பாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு 10 அணிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் மும்பை அணிகள் இந்த முறை ஐபிஎல்லில் சொதப்பி கொண்டு வருகிறது.

ஆனால் புதிதாக வந்துள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகளும் ரசிகர்களுக்கு வெற்றியினை பரிசாக கொடுத்து கொண்டு வருகிறது. குஜராத் அணியின் கேப்டனாக உள்ளார் ஹார்திக் பாண்டியா.

குஜராத் விளையாடிய 7 போட்டிகளில் ஒரு தோல்வி மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் அனைத்து அணிகளுக்கும் கடும் போட்டியாக உள்ளது. அதிலும் குறிப்பாக புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஹைதராபாத் கூட்டணியோடு இன்று பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

இந்தப் போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா நம்ப முடியாத வகையில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதனால் முதல் இன்னிங்சை தொடங்க ஹைதராபாத் வீரர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இந்த இரண்டு அணியிலும் பந்துவீச்சு தரமாக உள்ளதால் இரண்டு அணிகளுக்கிடையேயான போட்டி பெரும் சவாலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.