Connect with us

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: குமரி, நீலகிரிக்கு விரைந்த தலா இரண்டு பேரிடர் மீட்பு படை!!

rescue team scaled

செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: குமரி, நீலகிரிக்கு விரைந்த தலா இரண்டு பேரிடர் மீட்பு படை!!

நடப்பாண்டில் பருவமழையின் அளவு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. ஏனென்றால் எந்த ஒரு ஆண்டிலும் இல்லாத வகையில் தென்மேற்கு பருவமழையானது தமிழகத்தில் இந்த ஆண்டு அதிக அளவு கிடைத்துள்ளது.

இதனால் பல இடங்களில் நீர்நிலைகள் அனைத்தும் முழுவதுமாக நிரம்பியுள்ளன. மேலும் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பானது அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ளன. இன்றைய தினம் காலையில் காவிரி நீரானது கர்நாடகாவில் இருந்து அதிக அளவு தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது.

மேலும் நான்கு மாவட்டங்களில் கண்காணிப்பு குழு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர்  கூறியிருந்தார். அதன்படி நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் அதிதீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு பேரிடர் மீட்புடை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த இரண்டு மாவட்டத்துக்கும் தலா இரண்டு பேரிடர் மீட்பு படை குழுக்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் நீரானது வீடுகளுக்குள் புகுந்துள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் பரவி கொண்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top