10,12ஆம் வகுப்புகளுக்கு இனி இரண்டு பொதுத்தேர்வுகள்: அதிரடி அறிவிப்பு!

bbd4d5bf72beae205750431c23257e20-1-2

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத் தேர்வுகள் நடத்தப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

குறிப்பாக சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு 2 பொதுத் தேர்வுகள் நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது 

குறைக்கப்பட்ட பாட திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ள சிபிஎஸ்சி, இரண்டு பொதுத்தேர்வுகளிலும் சேர்த்து எடுக்கும் மதிப்பெண்கள் மாணவர்களின் மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும் என அறிவித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment