அப்போ எனக்கு பசிக்கும்ல நான் சாப்பிட கூடாதா? தீ விபத்தின்போது உணவு சாப்பிட்ட நபர்கள்!

ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததாக கூறுவார்கள் அல்லவா அப்படித்தான் இங்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்னை சுற்றி என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் எனக்கு சோறு தான் முக்கியம் என்று தீ விபத்தின் போது இருவர் மட்டும் கவலையோ, பதட்டமோ இல்லாமல் உணவருந்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பீம்வாடி பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு அவர்களும் சாப்பிட தொடங்கினார்கள்.

அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் கூச்சலிட்டு என்ன செய்வது நெருப்பை எப்படி அனைப்பது என தெரியாமல் அங்கு இங்கும் ஓடத் தொடங்கினர்.

இப்படி ஒரு மிகப்பெரிய கலவரமே நடந்து கொண்டிருந்த போது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் இருவர் மட்டும் சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அங்கு நடந்த தீ விபத்து குறித்து சிறிது கூட பதட்டம் இல்லாமல் உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையாமல் அசைவ உணவை வெளுத்து வாங்கி கொண்டிருந்தார்கள்.

விமானம் மீது போர்தொடுத்த பறவை கூட்டம்! நடுவானில் நிகழ்ந்த சம்பவம்!!

இந்த சம்பவத்தை நிகழ்ச்சிக்கு வந்த மற்றொரு நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. என்ன வேணா நடக்கட்டும் நமக்கு சோறு தான் முக்கியம் என்பது போன்ற அந்த இரண்டு நபர்களின் செயல் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ காண: https://twitter.com/musab1/status/1465128487707025409

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment