நேற்றைய சீனாவில் இருந்து மதுரை வந்த தாய் மகள் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று சீனாவில் இருந்து புதுக்கோட்டை வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதுவரை வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 39 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று சீனாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து மதுரை வந்த தாய் மகள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை உறுதி செயப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சீனாவில் இருந்து புதுக்கோட்டை வந்த இருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவர்களுக்கு பரவியது உருமாறிய கொரோனா வைரஸா என்பதை கண்டறிய மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.