Connect with us

கொரோனா பாதிப்பால் இரண்டு நர்ஸ்கள் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

Tamil Nadu

கொரோனா பாதிப்பால் இரண்டு நர்ஸ்கள் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

02d791227ae9d7f06852e4d177f10723

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் மருத்துவ ஊழியர்களும் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

மதுரையில் 8 மாத கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தார் என்ற தகவல் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 நர்சுகள் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர் 

940f8e505259c911017237475ceabb9f

ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்றும் ஒருவர் வேலூரை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருதய இயல் துறையில் நர்சாக பணியாற்றி இந்திரா என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலியானார். அதேபோல் வேலூர் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்த பிரேமா என்பவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே நர்ஸ்கள் தங்களுடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top