Connect with us

அமமுக கூட்டணியில் இணைந்த மேலும் இரண்டு கட்சிகள்!

News

அமமுக கூட்டணியில் இணைந்த மேலும் இரண்டு கட்சிகள்!

aa480ccdc36a46e66b5d1e55939909a5-1

தமிழக தேர்தலில் அதிமுக திமுக கூட்டணி தவிர மேலும் மூன்று கூட்டணிகள் உருவாகி உள்ளது தெரிந்ததே. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் தினகரனின் அமமுக கூட்டணி என்பது குறிப்பிடதக்கது 

இந்த நிலையில் தினகரனின் அமமுக கூட்டணியில் ஏற்கனவே ஒவைசி கட்சி இணைந்துள்ளது என்பதும் அக்கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அமமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் இணைந்துள்ளன 

d46e0c1474267791611cfa6bbc517fcd

மருது சேனை சங்கம் மற்றும் கோகுல மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் அமமுக கூட்டணியில் இணைந்து உள்ளதாகவும் இந்த இரண்டு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் தெரிவித்துள்ளார் 

மருது சேனை சங்கம் கட்சி மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் கோகுல மக்கள் கட்சியை கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top