இந்தியாவில் மேலும் புதிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள்! ஒரு கொரோனா தடுப்பு மாத்திரைக்கு அனுமதி!!

இந்தியாவில் தற்போது வரை 142 கோடிக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகின்றன.

கோவாக்சின் - கோவிஷீல்டுnew

மத்திய அரசும் ஜனவரி 3ஆம் தேதி முதல் சிறார்களுக்கு கோவாக்சின்  தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறியிருந்தது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியா முழுவதும் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் மேலும் இரண்டு புதிய கொரோனா  தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கோவோவேக்ஸ், கோர்பிவேக்ஸ் என்ற தடுப்பூசிகளுக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

கோவோவேக்ஸ், கோர்பிவேக்ஸ் என்ற புதிய இரண்டு தடுப்பூசிகளையும் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு மோல்நுபிரவிர் கொரோனா தடுப்பு மாத்திரைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

மேலும் இரண்டு தடுப்பூசிக்கு அனுமதி அளித்தாலும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தும் மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment