Connect with us

அபுதாபி டிரோன் தாக்குதலில் 2 இந்தியர்களின் அடையாளம் தெரிந்தது! விரைவில் உடல்கள் ஒப்படைக்கப்படும்:இந்திய தூதரகம்

drone strike

செய்திகள்

அபுதாபி டிரோன் தாக்குதலில் 2 இந்தியர்களின் அடையாளம் தெரிந்தது! விரைவில் உடல்கள் ஒப்படைக்கப்படும்:இந்திய தூதரகம்

அபுதாபி டிரோன் தாக்குதலில் 2 இந்தியர்களின் அடையாளம் தெரிந்தது! விரைவில் உடல்கள் ஒப்படைக்கப்படும்:இந்திய தூதரகம்

தற்போது நாம் வாழும் நவீன உலகத்தில் அடுத்தடுத்த பயங்கரவாத நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மனிதனால் செய்யப்படும் தாக்குதலும் அதிகமாகவே காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் டிரோன் மூலம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் டிரோன் மூலம் தாக்குதல் நடைபெற்றது. அதில் பரிதாபமாக இரண்டு இந்தியர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் அபுதாபி தாக்குதலில் இறந்த இரண்டு இந்தியர்களின் அடையாளம் தெரிந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அபுதாபியில் தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்கள் யார் என்று அடையாளம் தெரிந்தது என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது.

உயிரிழந்த 2 இந்தியர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம் என்றும் விரைவில் உடல்கள் ஒப்படைக்கப்படும் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த ஆறு பேரில் இரண்டு பேர் இந்தியர்கள் என்று இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். காயமடைந்த இந்தியர்கள் இரண்டு பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டனர் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top