துபாய் விமான நிலையத்தில் திக் திக் நொடிகள்…. ஒரே ஓடுபாதையில் மோத இருந்த இரண்டு இந்திய விமானங்கள்!

நாம் தற்போது வான்வழிப் போக்குவரத்திலேயே பயணம் செய்து வருகிறோம். அந்த அளவிற்கு நாளுக்கு நாள் விமான மற்றும் விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் விமானங்களின் விபத்து நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் பெருவாரியான விபத்துகள் நடக்காமல் தடுத்து விடமுடியும். அந்தவகையில் துபாயில் சிறிய தவறு கண்டுபிடிக்கப்பட்டு பெரிய விபத்தை தவிர்த்ததாக காணப்படுகிறது.

அதன்படி துபாய் விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் விமானங்கள் ஒரே ஓடுபாதையில் அமைக்கப்பட்டுள்ளதால் பெரும் மோதல் ஏற்பட இருந்தது. அதன்படி துபாயில் இருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத்துக்கு செல்லவிருந்த 2 இந்திய விமானங்களுக்கு ஒரே ஓடுபாதையே வழங்கப்பட்டிருந்தது.

ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் செல்ல இருந்ததை விமான அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஐந்து நிமிட இடைவெளி இருந்த 2 விமானங்களும் ஒரே ஓடுபாதையில் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதனை கண்டறிந்த அதிகாரிகள் ஹைதராபாத் விமானத்தை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.

இவை கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது. இதனால் பெருவாரியான விபத்து நிகழாமல் தடுக்கப்பட்டது இதுகுறித்து துபாய் விமான போக்குவரத்து அமைச்சகத்தை இந்திய விமான கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment