தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்
இந்த படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் இன்னொரு நாயகியும் நடிக்க இருப்பதாகவும் அவர் ராஷ்மிகா மந்தனாவாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது
இது குறித்து ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் பெரும்பாலான படங்களில் இரண்டு நாயகிகள் இருப்பார்கள் என்பதால் இந்த படத்திலும் இரண்டு நாயகிகள் தொடர்கிறது என்றும் கூறப்பட்டு வருகிறது
மேலும் இந்த படம் ஆக்ஷனில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் முழுக்க முழுக்க ஒரு காமெடி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது