சென்னை காவல்நிலையத்தில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்கள்: குடிபோதையில் செய்த அட்டகாசம்..!

24 வயதான இரண்டு இளம் பெண்கள் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் மது போதையில் புகுந்து ரகளை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணாநகர் ஆறாவது அவன்யூ என்ற பகுதியில் உள்ள தனியார் பாரில் நேற்று வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மது அருந்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி போதையில் இருந்து அவர்கள் நள்ளிரவுக்கு பின்னரும் பாரில் இருந்து வெளியேற மறுத்தனர்.

இதனை அடுத்து பார் ஊழியர்கள் அந்த இரண்டு இளம் பெண்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளம் பெண்கள் ரோட்டில் நின்று ரகளை ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தோண்டு போலீசார் வந்து அவர்களை எச்சரித்ததோடு ஆட்டோவில் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அந்த பெண்கள் வீட்டுக்கு செல்லாமல் அருகில் உள்ள அண்ணாநகர் அண்ணா நகர் காவல் நிலையத்திற்குள் சென்று ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்துறையினரிடம் பார் மீது புகார் அளிக்க வேண்டும் என்றும் தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூச்சலிட்டனர்.

போலீசார் அவர்களிடம் பொறுமையாக விசாரிக்க முயன்ற போது அவர்கள் தகராறு ஈடுபட்டதோடு காவல் நிலையத்தில் இருந்த பொருட்களையும் தூக்கி வீசி அட்டூழியம் செய்தனர். இதனை அடுத்து அவர்களுடைய மொபைல் ஃபோனில் இருந்து அவர்களுடைய உறவினர்களை அழைத்து அந்த அவர்களிடம் அந்த பெண்களை ஒப்படைத்தனர்.

பின்னர் மறுநாள் காலை அவர்களை நேரில் அழைத்து காவல்துறையினர் எச்சரிக்கை செய்து அனுப்பியதாக தெரிகிறது. மேலும் விசாரணையில் அவர்கள் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் என்றும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் நேற்று நள்ளிரவு அண்ணாநகர் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.