திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சி ஊராட்சி கோட்டை மாநகரை சேர்ந்தவர் 17 வயது சிறுவனான மில்டன் என்பவர் .
இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்த நிலையில் இன்று அதிகாலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து திருவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் மில்டனுடன் ஒன்றாக படித்த அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் பகுதியை சேர்ந்த உதயகுமார் சில நாட்களுக்கு முன் பெற்றோர் கண்டித்த நிலையில் தற்கொலை செய்துகொண்டாராம்.
இதனால் மனம் வருந்தி தனிமையில் வாடிய மில்டன் நண்பனின் பிரிவால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறி பாதுகாத்து வந்துள்ளனர். அப்படி இருந்தும் உதயகுமார் இறந்த அதே 5ம் தேதியான இன்று அதிகாலை மில்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.