இரட்டைக் குழந்தைக்கு இரண்டு தந்தைகள்: பிரேசில் அதிசயம்!!

பிரேசிலில் ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தைகள் இருப்பது மருத்துவத் துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒநே நாளில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தைகளின் தந்தை யார்? என்பது குறித்து கண்டறிய குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதனிடையே பரிசோதனை முடிவுகளை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் ஒரு குழந்தைக்கு மட்டுமே பாசிட்டிவ் என ரிசல்ட்டும், மற்றொரு குழந்தைக்கு நெகட்டிவ் வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மருத்துவர்கள் கூறுகையில் ஒரே நாளில் இரு வேறு ஆண்களுடன் உடலுறவு வைத்திருந்தால் இவ்வாறு நடந்ததாகவும், இரண்டு கரு முட்டைகள் உருவாகி இருந்தால் அவற்றுடன் ஒரு உயிரணு சேர்ந்து இரட்டை குழந்தை உருவாகியதாக கூறினர்.

இந்த சம்பவம் மிகவும் அறிதானது என்றும் அறிவியல் ரீதியாக HETEROPATERNAL SUPERFECUNDATION என்று அழைக்கப்படுவதாகவும், இது மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே நிகழும் என மருத்துவர் துலியோ ஜார்ஜ் கூறியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment