பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு நான்கு அல்லது ஐந்து பேர்கள் மட்டுமே செல்லும் நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். இதனால் இன்று குறைந்தது இரண்டு போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது
இந்த நிலையில் இன்று காலை முதல் வெளியான தகவலின்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவானிதான் இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரமோ வீடியோவில் கமல்ஹாஸன் இன்று ஒருவர் வெளியேற்றப்படுவதை உறுதி செய்து உள்ளார். எனவே இன்றைய நிகழ்ச்சியில் ஷிவானி வெளியேறுகிறார் என்பது தெரிகிறது
வழக்கமாக ஞாயிறு அன்று தான் எவிக்சன் இருக்கும் என்ற நிலையில் இன்று ஒருவர் வெளியேறியதால் நாளையும் ஒருவர் வெளியேறுகிறாரா? நாளை வெளியேறப் போவது யார்? கேபியா? அல்லது ரம்யாவா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
#BiggBossTamil இல் இன்று.. #Day97 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/rrbJf3r9mT
— Vijay Television (@vijaytelevision) January 9, 2021