உணவு பரிமாறும் போது சாகசம் செய்த ஹோட்டல் வெயிட்டர்.. ஹோட்டல் சாம்பலான பரிதாபம்..!

ஸ்பெயின் நாட்டு உணவகத்தில் பணியாற்றிய வெயிட்டர் ஒருவர் வாடிக்கையாளருக்கு பரிமாறும் போது சாசகம் செய்ததாகவும் அப்போது ஏற்பட்ட விபரீதம் காரணமாக அந்த ஓட்டல் தீப்பிடித்து இரண்டு பேர் பலியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் உணவகத்தில் வித்தியாசமாக வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்படும் என்று கூறப்படுகிறது. ஃபிளம் பீயிங் என்று கூறப்படும் பிரெஞ்சு உத்தியான இதில் உணவு பரிமாறுபவர் தனது வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறிவிட்டு அதன் மேல் மது வைத்து இன்னொரு கையில் அதை தீயை பற்ற வைப்பார். இது ஒரு பெரிய மேஜிக்காக இருக்கும் என்பதும் உணவின் மீது ஒரு விதமான புகை வாசனை சுவையை அளிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஓட்டலில் இந்த வகை பரிமாறும் தன்மை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்றும் இதற்காகவே பலர் இந்த ஓட்டலுக்கு வருகை தருவார்கள் என்றும் குறிப்பிடத்தக்கது.

hotel2

இந்த நிலையில் நேற்று இந்த உணவகத்தில் சாப்பிட வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு வெயிட்டர் ஒருவர் வழக்கம் போல் மேஜிக் செய்து மதுவை ஊற்றி தீயை பற்ற வைத்தார். அப்போது திடீரென ஏற்பட்ட விபரீதம் காரணமாக உணவகம் முழுவதும் தீ பரவியது. ஒரு சில நொடிகளில் அந்த ஹோட்டலில் உள்ள பல இடங்களில் தீ பரவியதை அடுத்து வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினார். இந்த விபத்தில் ஹோட்டல் பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் என இருவர் பலியாகி உள்ளதாகவும் பத்துக்கும் மேற்பட்டவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஓட்டலின் அருகிலேயே தீயணைப்புத் துறை அலுவலகம் இருந்ததால் உடனடியாக தீயணைப்புத் துறையினர் வருகை தந்து தீயை அணைத்தனர் என்பதும் இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளருக்கு சாகசம் செய்யும் வகையில் பரிமாறிய வெயிட்டர் ஒருவரால் ஒரு உணவகம் எரிந்து சாம்பலான விபரீதம் அந்த பகுதியில் வரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.