தமிழகம் முழுவதும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை 2 நாட்கள் மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து டாஸ்மாக் கடைகள் ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் ஏழு நாட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் அக்டோபர் 4 முதல் 6ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அதேபோல் இரண்டாம் கட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் அக்டோபர் 7 முதல் 9 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தினத்தின் போதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்
இந்த நிலையில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் அக்டோபர் 19ஆம் தேதி மிலாடி நபி ஆகிய இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
