புதுச்சேரியில் எத்தனை நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

வங்கக் கடலில் தோன்றிய உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதும் அதேபோல் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கனமழை காரணமாக தற்போது தமிழகத்தில் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை அமைத்து நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்களுக்கு தொடர் மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி கல்வி அமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment