அதிமுக நிர்வாகி கைது: வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி இரண்டு கோடி ரூபாய் பண மோசடி!

தொடர்ச்சியாக எதிர்க் கட்சியின் உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக

அது குறித்து அதிமுக உறுப்பினர்கள் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏனென்றால் அவர் பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் மற்றொரு அதிமுக நிர்வாகி வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி இரண்டு கோடி மதிப்பில் மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் காய்கறி வியாபாரிகளுக்கு மனை வாங்கி தருவதாக கூறி 2 கோடி மோசடி செய்த அதிமுக நிர்வாகி வைரவேல் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் நேதாஜி காய்கறி சந்தை வியாபாரிகள் சங்க பொருளாளரான வைரவேல் அதிமுக பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 2015 ஆம் ஆண்டு ரூபாய் 2 கோடி பணம் வசூலித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது .அதிமுக நிர்வாகிகள் வைரவேல்  உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பண மோசடியில் ஈடுபட்ட மேலும் 10 பேரை தனிப்படை போலீஸ் தேடுகிறது. வாங்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தை ஐந்து நிர்வாகிகள் தங்கள் பெயரிலும், தங்கள் உறவினர்கள் பெயரிலும் பதிவு செய்வதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது.சங்க உறுப்பினர்களுக்கு தெரியாமல் நிலத்தை ரூபாய் 12 கோடிக்கு விற்று விட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment