தமிழகத்தில் 19ஆம் தேதி சனிக்கிழமை தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே தேர்தல் நடை பெறுவதற்கு முன்னதாகவே வேட்பாளர்கள் வெற்றி பெறுகின்றனர்.
அதுவும் குறிப்பாக திமுக வேட்பாளர்கள் பலரும் போட்டியின்றி தேர்வு வருகின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அதன்படி கரூர் மாநகராட்சி 22வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரேமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக,பாஜக, சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் திமுக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக வேட்பாளரை எதிர்த்து சந்திப்பதற்கு பலரும் தயங்குவதாக காணப்படுகிறது.
இதனால் அதிமுக தேமுதிக உள்ளிட்ட பல கட்சியினர் தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெற்று வருகின்றனர். அதன்படி சென்னை துறைமுகம் தொகுதியில் தேமுதிகவை சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்று இரண்டு வேட்பாளர்களும் திமுகவுக்கு ஆதரவு தருவதாக பேட்டி அளித்துள்ளனர்.அதேபோல் உளுந்தூர்பேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார். உளுந்தூர்பேட்டை நகர அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த இளையபெருமாள் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.