ஏற்கனவே 1 போயிட்டு! இப்ப கூடவே ரெண்டு சேர்ந்து போயிட்டு!! சோகத்தில் அதிமுக!!!

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று இன்றைய தினம் 27,000 கவுன்சிலர்கள் பதவியேற்றனர். இதில் திமுக தனது வலிமையை மீண்டும் நிரூபித்துள்ளது. ஏனென்றால் பெரும்பாலான பகுதியில் திமுக கைப்பற்றியது.

திமுகஅதேசமயம் எதிர்க்கட்சியான அதிமுக ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றாலும் கூட சோகத்தில் காணப்படுகிறது. ஏனென்றால் தொடர்ச்சியாக அதிமுகவின் கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்து விடுகின்றனர்.

அதிமுகஅதன் வரிசையில் தற்போது இரண்டு அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்து உள்ளனர். அவர்கள் நாமக்கல்லில் அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள்.  பிரேமா, செந்தில் ஆகிய இரு மாவட்ட கவுன்சிலர்கள் அமைச்சர் மதிவேந்தன், திமுக எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்தனர்.

இதற்கு முன்னதாகவே நாமக்கல்லில் ஏற்கனவே ஒரு அதிமுக மாவட்ட கவுன்சிலர் திமுகவில் இணைந்து விட்டார். மொத்தம் மூன்று மாவட்ட  கவுன்சிலர்கள் சேர்ந்ததால் நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழுவில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் வெற்றி பெற்ற சில கவுன்சிலர் கூட திமுக கட்சியில் இணைந்ததால் தொடர்ந்து அதிமுக கட்சியில் சோகம் நிலவுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment