
தமிழகம்
ஒரே ஊரில் இரண்டு ஆக்சிடெண்ட்!! முப்பது பேர் படுகாயம்; இருவர் உயிரிழப்பு.!!
நாள்தோறும் தமிழகத்தில் விபத்து ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக பல இடங்களில் ஏற்படுகின்ற விபத்தானது அதிகளவு உடல் காயங்களை ஏற்படுத்தும். ஒரு சில நேரங்களில் உயிரிழப்பும் சாலைகளிலேயே நிகழும்.
இதனால் ஒவ்வொரு இடங்களிலும் வேகக் குறைப்பு பாதகை மற்றும் வாசகங்கள் அடங்கிய பலகைகள் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் மதுரையில் இரு வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அதன்படி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் அவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்டனர்.
மேலும் மற்றும் ஒரு இடத்தில் லாரி மோதி சம்பவ இடத்திலேயே தம்பதி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ராஜா, செல்லம்மாள் உயிரிழந்தனர்.
