ட்விட்டரிலும் இனி சம்பாதிக்கலாம்.. எலான் மஸ்க் சூப்பர் அறிவிப்பு..!

ட்விட்டர் என்பது இதுவரை பொழுதுபோக்கு அம்சமாகவும் கருத்துக்களை பரிமாறி கொள்ளும் ஒரு தளமாகவும் இருந்த நிலையில் தற்போது இதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற எலான் மஸ்க் அவர்களின் அறிவிப்பு பயனாளிகளை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து சமூக வலைதளங்களும் தற்போது பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கி வருகின்றன என்பதும் குறிப்பாக பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு பெரும் தொகையை வழங்கி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ட்விட்டரில் இனி கட்டுரைகள் எழுதலாம் என்றும் அந்த கட்டுரைகளுக்கு இடையில் விளம்பரங்கள் பதிவு செய்யப்பட்டு அந்த விளம்பரங்கள் மூலம் வரும் வருமானம் அந்த கட்டுரை எழுதியவருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பயனாளிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ட்விட்டரில் முன்பு 140 கேரக்டர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று இருந்த நிலையில் தற்போது எவ்வளவு கேரக்டர் வேண்டும் ஆனாலும் பதிவு செய்யலாம் என்ற நிலை உள்ளதால் பல பயனுள்ள விஷயங்களை விரிவாக எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் ட்விட்டரில் பொதுமக்களுக்கு தேவையான சமூக மற்றும் அறிவியல் கருத்துக்களை கட்டுரையாக எழுதுபவர்களுக்கு இனி பணம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இந்த வருவாய் ட்விட்டரில் வெரிஃபைடு பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வெரி பேட் பயனாளர்களின் கட்டுரையில் மட்டுமே விளம்பரம் அனுமதிக்கப்படும் என்றும் இதற்காக ஐந்து மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் பிரிவுத்துள்ளார். இந்த அறிவிப்பு மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையை அனைவருக்கும் தூண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews