உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தும் சமூகவலைதளம் என கூறினால் அது டுவிட்டர் தான். அந்த வகையில் நாளுக்கு நாள் பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து போன்ற நாடுகளில் டுவிட்டர் சேவை முடங்கியுள்ளது.
இதில் சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இயல்பு நிலையை அடைந்ததாக தெரிகிறது. இதனால் டுவிட்டர் பயனாளர்கள் கடும் அவதி அடைந்ததாக புகார் அளித்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ட்வீட்களை இடுகையை தடுக்கும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதாகவும், நிலைமை சீரடைந்து விட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்தது.
மேலும் தொழில்நுட்ப கோளாறுக்கு பயனாளர்களிடம் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியது. இந்த தகவல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.