டுவிட்டரில் இனிமேல் லிங்க் இணைக்க முடியாது.. அதிரடி உத்தரவிட்ட எலான் மஸ்க்!

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மற்ற இணைய தளங்களின் இணைப்புகள் இணைக்கப்பட்டு வரும் நிலையில் இனி டுவிட்டரில் மற்ற இணைப்புகளை இணைக்க முடியாது என அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரும்பாலான சமூக வலைதளங்கள் புரமோஷனுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் செய்தி இணையதளங்கள் தாங்கள் பதிவிடும் செய்திகளின் இணைப்புகளை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் 44 பில்லியன் டாலர் கொடுத்து எலான் மஸ்க் வாங்கிய நிலையில் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது வந்துள்ள அறிவிப்பின்படி இனிமேல் டுவிட்டரில் மற்ற இணையதளங்களின் லிங்குகளை இணைக்க முடியாது என அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி மேலும் சில சமூக வலைதளங்களில் லிங்குகளையும் இணைக்க முடியாது என்று கூறியுள்ளார். அதில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரம்பித்த ட்ரூத் என்ற சமூக வலைதளங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. டுவிட்டரில் இனிமேல் பதிவுகளை மட்டுமே செய்ய முடியும் என்றும் மற்ற இணையதளங்களின் லிங்குகளை இணைக்க முடியாது என்று எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.